பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தோல்வியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
ஒற்றையாட்சியில் அதிகாரப் பரவலாக்கலுக்கு அப்பால் அதிகாரப் பகிர்வுக்கு முழு உடன்பாடு இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டுடன் இணைந்து அரசியல் கட்சிகளின் கருத்தைக் கோரி ஜனாதிபதி அலுவலகம் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் கட்சி அந்தக் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளது.
அதற்கமைவாக, அதிகாரப் பகிர்வுக்கு மாவட்ட சபை முறைமை முன்மொழியப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் கட்சியின் செயலாளர் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.