அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினை கருத்தில் கொண்டு, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அவசியமான நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு இடம்பெறாவிட்டால், எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அரச, தனியார் துறையினருக்கு 10 ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு அவசியமாகும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.