follow the truth

follow the truth

November, 19, 2024
HomeTOP1உலகின் மிகப்பெரிய எலி தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு

உலகின் மிகப்பெரிய எலி தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு

Published on

ஸ்லோவாக்கிய மிருகக்காட்சிசாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு ஜோடி கேபிபராக்கள் (Capybara) அடுத்த மாதம் முதல் வாரத்தில் காட்சிப்படுத்தப்படும் என தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.

இந்த விலங்குகள் தெஹிவளை மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப் பெரிய கொறித்துண்ணிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்த விலங்குகள் மிகவும் நட்புடன் இருப்பதாகவும், தண்ணீருக்கு அருகில் வசிக்கும் இந்த கேபிபரா தனது சுவாசத்தை நீருக்கடியில் சுமார் ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கும் திறன் கொண்டது என்றும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

கேபிபராஸ் தாவரவகைகள் மற்றும் குழுக்களாக வாழ விரும்புகின்றன. விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் படி இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு அவை கிடைக்கப்பெற்றன. ஒரு மாத தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு அவை காட்டப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தகவல் சாளரம்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் (19) நாளையும் (20)...

NPP தோழர்கள் விட்ட முதலாவதும் பாரதூரமானதுமான அரசியல் இராஜதந்திர தவறு – மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

முதலாவதாக இது பல்லின பலமத பல மொழி பலகலாசார பண்புகளைக் கொண்ட தேசம் என்பதனைப் பிரதிபலிக்கும் அரசியலமைப்பை அரசை...

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்...