சம்பள கோரிக்கை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 9 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுகாதார பிரிவு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் 16 சுகாதார பிரிவு தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.