அடுத்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தனியான கூட்டணியை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராகவும், பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராகவும் முன்வைக்க இந்தக் குழு எதிர்பார்ப்பதாக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.