பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மாற்றியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கபர்க் அறிவித்துள்ளார்.
இதன்படி, மெட்டா (META) என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ள போதிலும், நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகியவற்றின் பெயர்களில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு வர்சுவல் ரியாலிட்டி (virtual reality) தொழில்நுட்பத்தை இனி வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.