நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகே. இடையிலான கலந்துரையாடலொன்று கொழும்பு, கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் நடைபெற்றது.
மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் நகர, கிராம பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் இணைப்புகள் குறித்து, நீர்வழங்கல், வடிகாலமைப்பில் உள்ள குறைப்பாடுகள் சம்பந்தமாகவும், சுகாதார பாதுகாப்பான நீரை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை பற்றியும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.
இதற்கான தீர்வு பொறிமுறையை தயாரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி பேசப்பட்டு, தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ளன.
இதன்போது, மத்திய மாகாண தமிழ்க் கல்வி பிரிவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும் என்று ஆளுநர் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார். மேலும், இதற்கான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.