follow the truth

follow the truth

November, 20, 2024
HomeTOP1நாட்டின் 15 மாவட்டங்களில் சுமார் 54979 குடும்பங்களுக்கு கடுமையான நீர் தட்டுப்பாடு

நாட்டின் 15 மாவட்டங்களில் சுமார் 54979 குடும்பங்களுக்கு கடுமையான நீர் தட்டுப்பாடு

Published on

கடும் வரட்சி காரணமாக நாட்டின் 15 மாவட்டங்களில் 54979 குடும்பங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் இந்தக் குடும்பங்களில் ஒரு இலட்சத்து எண்பத்து மூவாயிரத்து முப்பத்தெட்டு பேர் அடங்குவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் மாத்தளை ஆகிய 15 மாவட்டங்கள் கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் மாவட்டங்களாகும்.

கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் அதிகளவான மக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மாவட்டத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் குடும்பங்களின் எண்ணிக்கை 21,999 ஆகும். அந்தக் குடும்பங்களில் 70238 பேர் அடங்குவர்.

கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் மக்களுக்கு நீர் விநியோகம் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, நீர் விநியோகத்திற்காக நாடு முழுவதும் 200 பவுசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை மிகவும் மோசமாகி வருவதாகவும் அவர் கூறினார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 4039 குடும்பங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 2320 குடும்பங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 8892 குடும்பங்களும், அம்பாறை மாவட்டத்தில் 7739 குடும்பங்களும், புத்தளம் மாவட்டத்தில் 786 குடும்பங்களும், குருநாகல் மாவட்டத்தில் 14,433 குடும்பங்களும், மன்னார் மாவட்டத்தில் 1952 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 952 குடும்பங்களும். மேலும் வவுனியா மாவட்டத்தில் 450 குடும்பங்களும், பதுளை மாவட்டத்தில் 329 குடும்பங்களும், மொனராகலை மாவட்டத்தில் 140 குடும்பங்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 1513 குடும்பங்களும், கம்பஹா மாவட்டத்தில் 922 குடும்பங்களும், மாத்தளை மாவட்டத்தில் 263 குடும்பங்களும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. .

இதற்கிடையில், இந்த மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான வனவிலங்குகளும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SJBயின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டாரவை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிப்பு

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட புதிய அமைச்சக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களை நாளைய தினத்திற்குள் கையளிக்குமாறு அறிவுறுத்தல்

நாளைய தினத்திற்குள்(20) உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 108 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும்...