வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு உள்ளூர் ஒப்பந்தங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
74 வீரர்களுக்கு 11 மாத காலத்திற்கு இந்த ஒப்பந்தங்களை அவர்கள் வழங்கியுள்ளனர், அவர்களில் 59 வீரர்கள் வளர்ந்து வரும் மற்றும் 19 வயதுக்குட்பட்ட வீரர்களாக உள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட வீரர்கள் எவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதான ஒப்பந்தங்களில் இடம்பெறாத வீரர்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்ட 74 வீரர்களில், 14 பேர் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியை முன்பு பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள், இதில் ஜாவேரியா கான், கைனாட் இம்தியாஸ், அனம் அமீன் மற்றும் ஐமன் அன்வர் ஆகியோர் அடங்குவர்.
இந்த வீரர்கள் தவிர, தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தாத மூத்த வீரரான நோரீன் யாகூப் என்பவரும் இந்த ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வீராங்கனைகளை சலீம் ஜாபர் தலைமையிலான மகளிர் கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளதுடன், ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகளுக்கு போட்டித் தொகை மற்றும் பரிசுத் தொகையுடன் மாதாந்தம் ஓரளவு பணம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.