பிரேசிலின் தலைசிறந்த கால்பந்து வீரர் நெய்மர் ஜுனியர் சவுதி அரேபியாவின் அல் – ஹிலால் அணியில் வருடமொன்றுக்கு 150 மில்லியன் யூரோக்கள் என்ற அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்த தொகை அவர் ஏற்கனவே விளையாடிய பீ.எஸ்.ஜீ அணியில் கிடைத்த வருமானத்தை விடவும் 06 மடங்கு அதிகம் எனவும் கூறப்படுகின்றது.
நெய்மர் அணிக்காக 73 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 13 கிண்ணங்களை வெற்றிபெற உதவியுள்ளார். அதில் 05 சம்பியன் லீக் கிண்ணமும் அடங்கும். 2020 ஆம் ஆண்டு சாம்பியன் லீக் போட்டிகளில் இறுதி போட்டிக்கும் நெய்மர் விளையாடிய பீ.எஸ்.ஜீ அணி தெரிவானது.
உலகின் ஒரு சிறந்த நட்சத்திர வீரர் மற்றும் தடுக்க முடியாத தாக்குதல் சக்தியான நெய்மரை எங்கள் ஹிலால் அணிக்கு வரவேற்பதில் பூரிப்படைகின்றோம் என அல் ஹிலாலின் தலைவர் ஃபஹத் பின் சாத் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் விளையாடிய பிரேசிலிய வீரர்களின் நீண்ட பட்டியலை நான் பின்தொடர்ந்து வருகிறேன். எனவே சவுதி அரேபியா எனக்கு பொருத்தமான இடமாக இருக்கும் என நெய்மர் தெரிவித்துள்ளார்.