சீனாவில் சிறிய நகரங்களில் விண்ணை தொடும் அளவிற்கு கட்டடங்களை கட்ட சீனா தடை விதித்துள்ளது.
சீனாவில் மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையுள்ள நகரங்களில் 150 மீட்டரைவிட (492 அடி) உயரமான கட்டடங்களை கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் தொகையை விடவும் அதிகமாக உள்ள நகரங்களில் 250 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் கட்டடங்களைக் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவில் ஏற்கெனவே 500 மீட்டர்களை விட உயரமான கட்டடங்களை கட்ட தடை உள்ளது.
சென்சென்னில் உள்ள 632 மீ ஷாங்காய் டவர் மற்றும் 599.1 மீ பீங் ஆன் ஃபைனான்ஸ் சென்டர் உட்பட உலகில் மிகவும் உயரமான கட்டடங்களில் சில சீனாவில் உள்ளன.
கண்ணைக் கவரும் கட்டடங்களை கட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் உள்ளூர் கட்டுமான நிறுவனங்களை கண்டித்து, சீனா தொடர்ந்து விலையுர்ந்த தோற்றப்பொலிவுக்காக கட்டப்பட்ட கட்டடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த வருடத்தில் ஆரம்பித்தில் அந்நாட்டு அரசு ‘அழகற்ற கட்டடக்கலை’க்கு தடை விதித்தது.