புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (15) இடம்பெற்றது, அங்கு திருவிழாவில் சூதாட்ட விளையாட்டுகளை சேர்ப்பது தொடர்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோருக்கு இடையில் இது இடம்பெற்றுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த – அலி சப்ரி அவர்களே இது புத்தளம் சட்டமல்ல, நாட்டின் பொதுவான சட்டம். ஒரு பக்கம் கொவிட் தொற்று அடுத்த பக்கம் சஹ்ரானின் குண்டுத் தாக்கிதல், மக்கள் மன அழுத்தத்தில் உள்ள இந்நேரத்தில் கொஞ்சமாவது சிரித்து கூத்தாட வேண்டுமே.. பணக்காரர்கள் நைட் க்ளப் என்று சென்று கூத்தாடுவார்கள், சாதாரண மக்கள் 200 ரூபா கொடுத்து திருவிழாக்களுக்கே செல்வார்கள். அதற்கு முட்டுக்கட்டாக இருப்பது அவ்வளவு நல்லதல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவரது பார்வையில் மிகப் பெரியளவில் பணப்பரிமாற்றம் செய்து சூதுகள் என்றால் பரவாயில்லை என நினைக்கிறார் என நான் நினைக்கிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி – அமைச்சரே, அங்கு வருபவர்களில் அநேகமானவர்கள் கஞ்சா, குடு அடிப்பவர்கள். அவர்கள் பின்னர் வீடுகளை உடைப்பார்கள். அது பிரச்சினையாகும். சூது விளையாட்டு சரிப்பட்டு வராது. அதற்கு லைசன்ஸ் தேவை. அதுவும் பிரச்சினையில் தான் முடியும்.
இந்த உரையாடலில் கலந்து கொண்ட பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில் இது சூது இடமல்ல, மாறாக சிறு சிறு விளையாட்டுக்கள் உண்டு அதற்கே மக்களிடம் இருந்து பணம் அறவிடுகின்றனர் எனத் தெரிவித்திருந்தார்.