தம்புள்ளை ஓரா (Dambulla Aura) மற்றும் கோல் டைடன்ஸ் அணிகள் (Galle Titans)இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 14ஆவது போட்டியில் தம்புள்ளை ஓரா அணியினை கோல் டைடன்ஸ் அணியானது 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
மேலும் இந்த வெற்றி தம்புள்ளை ஓரா அணிக்கு LPL தொடரில் 3ஆவது தொடர் வெற்றியாக அமைய, கோல் டைடன்ஸ் அணி நான்காவது தொடர் தோல்வியினைப் பதிவு செய்திருக்கின்றது.
கோல் டைடன்ஸ் மற்றும் தம்புள்ளை ஓரா அணிகள் மோதிய LPL போட்டி நேற்று (11) கொழும்பில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை ஓரா அணி முதலில் கோல் டைடன்ஸ் அணியினைத் துடுப்பாடப் பணித்தது.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கோல் டைடன்ஸ் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது. கோல் டைடன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அதன் தலைவர் தசுன் ஷானக்க 26 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்தார். தம்புள்ளை ஓரா அணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமன்த 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 134 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ளை ஓரா அணி அவிஷ்க பெர்னாண்டோவின் அதிரடி ஆட்டத்தோடு போட்டியின் வெற்றி இலக்கை 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.
தம்புள்ளை ஓரா அணியின் வெற்றிக்கு உறுதியாக இருந்த அவிஷ்க பெர்னாண்டோ வெறும் 49 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 70 ஓட்டங்கள் எடுத்தார். கோல் டைடன்ஸ் அணியில் லஹிரு குமார 02 விக்கெட்டுக்களை எடுத்த போதும் அது வீணாகியிருந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக அவிஷ்க பெர்னாண்டோ தெரிவாகினார். இப்போட்டியில் தோல்வியினைத் தழுவிய கோல் டைடன்ஸ் அணி தொடரின் சுபர் 4 சுற்றுக்குத் தெரிவாக தமக்கு எஞ்சியிக்கும் இரண்டு போட்டிகளிலும் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்து காணப்படுகின்றது.