அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான இலங்கை அணிவீரர் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவிற்குள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீதிமன்றம் தளர்த்தியுள்ளது
எனினும் தனுஸ்ககுணதிலக வாரத்தில் மூன்று நாட்கள் காவல்நிலையத்திற்கு செல்லவேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிபதி தனுஷ்க குணதிலக ஒரு கையடக்க தொலைபேசியை மாத்திரம் பயன்படுத்தலாம் டேட்டிங் பக்கங்கள் அப்களை பயன்படுத்த முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.