follow the truth

follow the truth

January, 23, 2025
HomeTOP1கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணியை எதிர்த்தாடிய ஜப்னா கிங்ஸ் அணிக்கு வெற்றி

கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணியை எதிர்த்தாடிய ஜப்னா கிங்ஸ் அணிக்கு வெற்றி

Published on

லங்கா பிரீமியர் லீக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணியை எதிர்த்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இந்தப் போட்டியில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணியின் தலைவராக பாபர் அசாம் செயற்பட்டதுடன், நிரோஷன் டிக்வெல்ல போட்டியில் விளையாடவில்லை.

கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணியின் தீர்மானத்தின்படி முதலில் களமிறங்கிய பெதும் நிஸ்ஸங்க மற்றும் பாபர் அசாம் ஆகியோர் அற்புதமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டனர். குறிப்பாக பெதும் நிஸ்ஸங்க வேகமாக ஓட்டங்களை குவித்தார். இவர்கள் இருவரும் 57 ஓட்டங்களை வெறும் 7 ஓவர்களில் பெற்று சிறந்த ஆரம்பத்தை பெற்றனர்.

எனினும் 25 பந்துகளில் 36 ஓட்டங்களை பெற்ற பெதும் நிஸ்ஸங்க, துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பாபர் அசாம் 24 ஓட்டங்களை பெற்றிருந்த போது டில்சான் மதுசங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதே ஓவரில் நுவனிது பெர்னாண்டோ 2 ஓட்டங்களுடன் வெளியேற கொழும்பு அணி தடுமாற தொடங்கியது.

கொழும்பு அணி 57 ஓட்டங்களை விக்கெட்டிழப்பின்றி பெற்றிருந்த போதும் 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், 99 ஓட்டங்களுக்கு 5வது விக்கெட்டினையும் இழந்தது. ஓட்ட வேகம் குறைய ஆரம்பித்த போதும், லஹிரு உதார 29 ஓட்டங்கள், மொஹமட் நவாஸ் 27 ஓட்டங்கள் மற்றும் சாமிக்க கருணாரத்ன 21 ஓட்டங்கள் என பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை சற்று பலமானதாக மாற்றினார்.

இதன்மூலம் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் டில்சான் மதுசங்க மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் மற்றும் நிசான் மதுஷ்க ஆகியோர் சிறப்பான பிரகாசிப்புகளை வெளிப்படுத்தினர்.

இவர்கள் இருவரின் துடுப்பாட்ட இன்னிங்ஸ்கள் போட்டியை ஆரம்பத்திலிருந்து ஜப்னா கிங்ஸ் அணி பக்கம் திருப்பியிருந்தது. வேகமாக ஆடிய குர்பாஸ் வெறும் 21 பந்துகளில் 39 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க மறுமுனையில் நிசான் மதுஷ்க 32 பந்துகளில் 46 ஓட்டங்களை குவித்து அரைச்சதத்தை தவறவிட்டார்.

குறித்த இந்த வீரர்களின் இன்னிங்ஸ்கள் ஜப்னா அணியின் வெற்றியை இலகுவாக்கியதுடன், திசர பெரேரா, சரித் அசலங்க மற்றும் தவ்ஹித் ஹிரிடோய் ஆகியோரின் சிறிய பங்களிப்புகள் 14.3 ஓவர்களில் ஜப்னா அணி வெற்றியடைவதற்கு உதவியிருந்தது. எனவே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜப்னா அணி வெற்றியை தமதாக்கிக்கொண்டதுடன், புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஜித் நிவாட் கப்ராளுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு...

அனுர யாப்பாவுக்கு பிணை

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும்...

சாமர கேட்ட கேள்விகளில் ஹரிணியின் வாய் லொக் ஆனது – இந்த ரேஞ்ச் ரோவர் வசந்தாவுடையது

அரசாங்கம் தங்களுக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லை என்று கூறிய போதிலும், பல அரசாங்க அமைச்சர்கள் அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற...