முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யுனிசெஃப் நிறுவனத்தின் அனுசரணையுடன் சப்ரகமுவ மாகாணத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் போஷாக்கு மதிய உணவுத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக ருவன்வெல்ல பல்லேக்னுகல கனிஷ்ட கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் யுனிசெஃப் நிறுவனத்தின் இலங்கைக்கான வெளிநாட்டு பிரதிநிதியாக சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டிருந்தார்.