மிஹிந்தலையின் மின்சாரக் கட்டண நாடகத் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக எழுதியிருந்தால் அரச நாடக விழாவில் கூட விருதுகளை வென்றிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலை விகாரையின் மின்சாரத்தினை வெட்டியதாக தேரர் கூறியவுடன், நாடகத்தின் அடுத்த காட்சி நடிகர் சஜித் பிரேமதாச உடனடியாக முன்னோக்கி பாய்ந்து மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் காட்சி, பார்வையாளர்கள் நினைத்தபடியே அனைத்தும் நடந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.
ஒரு நல்ல நாடகத்தின் அடுத்த காட்சியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்க்க வேண்டும் என்றும், ஆனால் “மிஹிந்தலை வெளிச்சம்” நாடகத்தில் நடிகரும், துணை நடிகருமான சஜித் பிரேமதாசவும் வழமை போல் நன்றாக இம்முறையும் தலை குளித்துத்துக் கொண்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலை விகாரையை தரிசிக்க வரும் அப்பாவி மற்றும் வறிய பங்களிப்பாளர்களிடம் விகாரைக்கு மின் கட்டணத்தினை செலுத்தவும், பற்றுச்சீட்டு விற்ற பணத்தை என்ன செய்தார்கள் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்தை நிமிரச் செய்த மிஹிந்தலை மகானின் பெயரை மந்தமான அரசியல் நாடகங்களில் பயன்படுத்த வேண்டாம் என தாம் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.