follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉலகம்அமெரிக்காவில் 5 – 11 இடைப்பட்ட சிறுவர்களுக்கு Pfizer

அமெரிக்காவில் 5 – 11 இடைப்பட்ட சிறுவர்களுக்கு Pfizer

Published on

அமெரிக்காவில் 5 தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு Pfizer ​கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு அமெரிக்க உணவு மற்றும் ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் நிபுணர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, Pfizer ​தடுப்பூசியை 05 தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்றுவதற்கான அவசர பயன்பாட்டு அனுமதியை, அடுத்த சில வாரங்களுக்குள் வழங்குவதற்கான வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வயது பிரிவைச் சேர்ந்த சிறுவர்களுக்கு Pfizer ​தடுப்பூசி பாதுகாப்பானதென்பதை, மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் காண்பிப்பதாக அதன் உற்பத்தி நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

12 மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு Pfizer ​தடுப்பூசியை அமெரிக்கா முன்னரே ஏற்றிவருகின்றது.

இந்தநிலையில், தற்போதைய புதிய தீர்மானத்தின் கீழ் 28 மில்லியன் அமெரிக்க சிறுவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

இந்த புதிய தீர்மானத்துக்கு அமெரிக்க உணவு மற்றும் ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை அத்துடன் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புப்பிரிவு ஆகியவற்றின் மேலதிக அனுமதியைப் பெறவேண்டியுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...

புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவல்

எக்ஸ். இ. சி. புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலந்து,...

டொனால்ட் டிரம்பை சந்திக்கும் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க...