சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி கூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியாயமான காரணமின்றி தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை செல்லாது என உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று (03) மற்றுமொரு வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதால் இந்த மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது.