பிரபல கத்தோலிக்க பாதிரியார் சிறில் காமினி பெர்னாண்டோவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) பணிப்பாளர்களுக்கு அரச புலனாய்வுச் சேவைகளின் (எஸ்ஐஎஸ்) தலைவர் சுரேஷ் சலே உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
இருந்தாலும் இவரை விசாரணைக்காக அழைக்குமாறு மட்டுமே உத்தரவிடப்பட்டுள்ளதாக புலனாய்வுத் துறையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளுக்கும் அரச புலனாய்வு நடவடிக்கைகளுக்கும் இடையிலான தொடர்பைக் கோடிட்டுக் காட்டும் வகையில் ஒக்டோபர் 24, 2021 அன்று ஒரு வெபினாரில்
பாதிரியார் சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.