மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட அணி இரண்டு இளையோர் டெஸ்ட் மற்றும் மூன்று இளையோர் ஒருநாள் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்திற்காக இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ள இந்த சுற்றுப்பயணம் ஒரு நாள் போட்டியுடன் தொடங்கி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 1 வரை போட்டிகள் நடைபெறும். அதன் பிறகு செப்டம்பர் 5 முதல் 15 வரை டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.
போட்டிக்காக பயன்படுத்தப்படும் மைதானங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் பெரும்பாலும் போட்டிகள் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
போட்டி அட்டவணை
இளையோர் ஒருநாள் போட்டி
- முதல் போட்டி ஆகஸ்ட் 27
- இரண்டாவது போட்டி – ஆகஸ்ட் 30
- மூன்றாவது போட்டி – செப்டம்பர் 1
இளையோர் டெஸ்ட் போட்டி
- முதல் போட்டி – செப்டம்பர் 5 முதல் 8 வரை
- இரண்டாவது போட்டி – செப்டம்பர் 12 முதல் 15 வரை