follow the truth

follow the truth

September, 23, 2024
HomeTOP1மருந்து தட்டுப்பாட்டுக்கு இரண்டு மாதங்களில் தீர்வு

மருந்து தட்டுப்பாட்டுக்கு இரண்டு மாதங்களில் தீர்வு

Published on

இரண்டு மாதங்களுக்குள் மருந்துப் பற்றாக்குறையைப் போக்க தேவையான கொள்வனவுகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவசரகால நிலைமைகளின் கீழ் சுமார் 160 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

பொதுவாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 6 மாதங்கள் ஆகும் எனவும் எனவே அவசரகால கொள்வனவுகளை நடைமுறைப்படுத்தி செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்தது இரண்டு மாதங்களுக்குள் இந்த மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

புற்றுநோய்க்கு தேவையான 65 வகையான மருந்துகள் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே தற்போதைய பொருளாதார முறைக்கு ஏற்ப இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடி இந்த நிலைமையை முக்கியமாக பாதித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

சுமார் 350 வகையான மருந்துகள் உள்ளுர் உற்பத்தியாளர்களினால் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்த சமன் ரத்நாயக்க மேலும் 100 வகையான மருந்துகளை இந்த வருட இறுதிக்குள் உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் 80 முதல் 100 வரையிலான தரமற்ற (quality failure)மருந்துகள் இருப்பதாகவும், உலகின் பிற நாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் அவர் மேவலும் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...