பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இன்றைய இறுதி நாளில் சொற்ப ஓட்டங்களை மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இன்றும் 03 விக்கட்டுக்களை இழந்தாலும் போட்டியில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது.
ஆனால் இந்த போட்டியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை 2000 டொலர்களா அல்லது 5000 டொலர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காரணம் இலங்கை கிரிக்கெட் மூலம் வழங்கப்பட்ட பரிசுப் பத்திரத்தில் இலக்கத்தில் 5000 டொலர்கள் எனவும் எழுத்துக்களில் 2000 டொலர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த புகைப்படத்தை வைத்து இலங்கை கிரிக்கட்டை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.