நாளை மறுதினம்(16) ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை இலவசமாக பார்வையிடும் சந்தர்ப்பம் ரசிகர்களுக்கு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் எஸ்.எஸ்.சி. இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் ரசிகர்கள் மைதானத்தில் இலவசமாக பார்க்கலாம்.
முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம்(16) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இம்மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.