நனோ நைட்ரஜன் உரங்களைப் பயன்படுத்துவோருக்கு மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பவர்களுக்கு எவ்வளவு நிலம் வேண்டுமென்றாலும் வழங்கப்படும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு 5,10,15,25, 50 அல்லது 100 ஏக்கர் நிலம் தருவேன். ஒரு முதலீட்டாளர் அதைச் செய்ய முடிந்தால், நான் 25 ஏக்கர் நிலத்தை மட்டுமல்ல, அதற்கும் அதிகமான நிலத்தையும் தருவேன், ‘என்று அவர் கூறினார்.
இந்தியாவில் நனோ-நைட்ரஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், ஐக்கிய விவசாயிகள் அறக்கட்டளை லிமிடெட் அதை இலங்கையில் தயாரிக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.