25 ஆவது ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் கயந்திகா அபேரத்ன வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
தாய்லாந்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 4 நிமிடம் 14.39 விநாடிகள் எனும் நேரப் பெறுதியுடன் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதேவேளை, ஈட்டி எறிதல் போட்டியில் நதீஷா லேகம்கே வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
60.93 மீட்டருக்கு தனது திறமையை வௌிப்படுத்தி வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்தார்.