இந்நாட்டில் முதலாவது T-Ten கிரிக்கெட் போட்டியை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வீரர்களும் பங்குபற்றும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இப்போட்டியில் 06 அணிகள் பங்கேற்கவுள்ளன.
ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்றும் அவர்களில் 06 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்க வேண்டும் என்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பெண்களுக்கான டி-டென் போட்டியை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 04 அணிகள் பங்கேற்கவுள்ளன.