பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்ததில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன்படாததால், சி.டி.விக்ரமசிங்கவுக்கு அந்தப் பதவியில் பணியாற்றுவதற்கு மூன்று மாதங்களுக்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதில் தமக்கு விருப்பமில்லை என ஜனாதிபதி கடுமையாக கூறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன் 25ம் திகதி, சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலம் முடிவடைந்து, பொலிஸ் மா அதிபர் பதவி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு வெற்றிடமாகவே இருந்தது.
புதிய பொலிஸ் மா அதிபராக அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதி இதுவரை எந்த பெயரையும் முன்மொழியவில்லை என்ற நிலையில் சி.டி. விக்கிரமரத்னவை தொடர்ந்தும் சேவையில் இருக்கும் வகையில் அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.