follow the truth

follow the truth

November, 15, 2024
HomeTOP1ஜெரோம் பெர்னாண்டோ இங்கிலாந்துக்கு

ஜெரோம் பெர்னாண்டோ இங்கிலாந்துக்கு

Published on

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோ, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இந்நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவின்படி, அவர் நேற்று (06) இங்கிலாந்தில் சேவையொன்றை நடத்தியதாகத் தெரிகிறது.
“ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ ஜூலை 06 வியாழன் முதல் மூன்று நாட்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிவார்” என்று அந்த பதிவில் தெரிவிக்கின்றது.


பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதம் குறித்து அவர் கூறிய சர்ச்சைக்குரிய அறிக்கைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கிய நிலையில், கடந்த மே 16ஆம் திகதி அவர் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றார்.

அதன்படி அவர் சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்து சென்றுள்ளார். பின்னர், ஜெரோம் பெர்னாண்டோ மே 21 அன்று ஒரு நேரடி வீடியோவில் தனது கருத்துக்கள் மூலம் பௌத்தம், இந்து மதம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு ஏதேனும் தீங்கு விளைவித்திருந்தால் மன்னிப்பும் கோரினார்.

அதன் பின்னர் அவர் இலங்கைக்கு வராத நிலையில், கடந்த ஜூன் மாதம் 02ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெரோம் பெர்னாண்டோ விடயத்தில் இப்படி இருந்தாலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு ICCPR சட்டத்தின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரிய 39 நாட்களுக்குப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைது

2024 பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ்...

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்குச்...

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் நிறைவுபெற்றது. இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான...