உரம் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் ஹம்பாந்தோட்டையில் ஃபார்முலா ஒன் பந்தயப் பாதை அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்தித்தாள் அறிக்கையின்படி, இந்த திட்டத்திற்காக ஜப்பானிய மற்றும் ஸ்பானிஷ் முதலீட்டாளர்களுடன் ஆரம்ப கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. 5.6 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பந்தயப் பாதை அரச காணியில் அமைக்கப்படும் என அரசாங்கத்திற்கு நெருக்கமான அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
பந்தய கார்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.