பெரும் போகத்தின் போது சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபா நிவாரணத் தொகையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பெரும் போகத்தின் போது தேவையான அனைத்து மக்காச்சோள விதைகள் மற்றும் உரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
விவசாய அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சிறிய அளவிலான விவசாய-வணிக பங்கேற்பு திட்டத்தின் (SAPP- Small Scale Agri- Business Participation Project) ) கீழ் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மக்காச்சோளம் பயிரிடும் ஐந்து மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த சலுகைகள் வழங்கப்படும். ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராதபுரம், அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.