follow the truth

follow the truth

March, 12, 2025
Homeஉள்நாடுஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இன்று முதல் ஆரம்பம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இன்று முதல் ஆரம்பம்

Published on

கொவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு, முன்கூட்டியே அதற்கான முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று தொடர்பான சுகாதார வழிகாட்டிக்கு அமைவாக ஒரு நாள் சேவையை, பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகத்திலும், காலி – தென் மாகாண காரியாலயத்திலும் பொதுமக்கள் இந்த ஒருநாள் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளவர்கள் , தமது விண்ணப்பப் படிவத்தை தமது கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை தொடர்பான பிரிவில் ஒப்படைத்து, அதற்கான திகதி மற்றும் நேரம் என்பவற்றை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வியானி குணத்திலக்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரதமர் அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி வணிகமான 'கிரிப்டோ' நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம்...

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன்,...

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை...