நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி டக்வத் லூயிஸ் முறையில் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
காலி சர்வதேச விளையாட்டு திடலில் இன்று இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதன்படி, நியுஸிலாந்து மகளிர் அணி 31 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 127 ஒட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனையடுத்து போட்டி 31 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
அதன்பின்னர் இலங்கை மகளிர் அணிக்கு டக்வத் லூயிஸ் முறையின் மூலம் 29 ஓவர்களில் 196 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தநிலையில், 196 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 26.5 ஓவர்களில் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியின் வெற்றியிலக்கை கடந்தது.
இலங்கை மகளிர் அணி சார்பில், சமரி அத்தப்பத்து 80 பந்துகளில் 140 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.