ஐ.சி.சி உலக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் சுப்பர் சிக்ஸ் சுற்றின் இன்றைய போட்டியில் ஓமான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 48 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 362 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, விக்ரம்ஜித் சிங் 110 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், ஓமான் அணியின் பிலல் கான் 75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 36 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், ஓமான் அணி 363 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட தயாராக உள்ளது.