எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மருந்துகளை இறக்குமதி செய்யும் கொள்வனவு நடவடிக்கைகளை வினைத்திறனுள்ளதாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நிலையான நாட்டை நோக்கி – அனைவரும் ஒரே பாதையில்” என்ற தலைப்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“தற்போது, எங்கள் மத்திய மருந்தகத்தில் இருக்க வேண்டிய 190 மருந்துகளில் 800 வரை குறைந்துள்ளது.
ஆனால் மருத்துவமனைகளில் சுமார் 90 மருந்துகள் குறைவில் உள்ளன. ஏனென்றால் அந்த மருத்துவமனைகளில் சுமார் ஒரு மாதத்திற்கு மருந்து இருக்கிறது.
ஆனால் இன்னும் எம்மால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு இடம் எமக்கு உள்ளதுடன், அமைச்சரவையும் ஜனாதிபதியும் இது தொடர்பில் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். தற்போதைய நிலைமை தொடர்பான விரிவான அறிக்கையை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளேன்.
இந்த தற்காலிக மருந்து பற்றாக்குறையை சரிசெய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று நான் நம்புகிறேன்…”