நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்ப பிரிவுகளை நாளை (25) முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் இது தொடர்பில் ஆசிரியர் அல்லது அதிபருக்கு அறியப்படுத்துமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கோரியுள்ளார்.