follow the truth

follow the truth

January, 23, 2025
HomeTOP1மாணவர்களிடம் பணம் வசூலித்து ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடத்தத் தடை

மாணவர்களிடம் பணம் வசூலித்து ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடத்தத் தடை

Published on

மாணவர்களிடம் பணம் வசூலித்து ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடை செய்து மத்திய மாகாண கல்விச் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், நல்ல எண்ணத்துடன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, பணம் வசூலிக்காமல், மேலதிக வகுப்புகள் கற்பதற்கு, எவ்வித தடையும் இல்லை என, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே அவர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் சமத்துவமான பாடசாலைக் கல்வியை நிறுவும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை பரிசீலித்து சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாகவும் மத்திய மாகாண கல்வி செயலாளர் யு.பி. ஹேரத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தினால் முஸ்லிம்கள் தொடராக புறக்கணிக்கப்படுகின்றனர் – இம்ரான் மஹரூப்

அரசாங்கம் அடுத்தடுத்து முஸ்லிம்களை புறக்கணித்து வருகின்ற போதிலும் அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து கவனம் செலுத்தாது மௌனமாக...

பழங்குடியின மக்களின் பிரச்சினைகளுக்கு 3 மாத காலத்தினுள் தீர்வு

பழங்குடியின மக்கள் எமது நாட்டின் ஒரு அங்கம் எனவும், பழங்குடியின மக்களுக்கும் அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் இருக்க வேண்டும்...