உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து நான்காவது முறையாக அடுத்த மாத தொடக்கத்தில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, புதிய விலைகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றார்.
கடந்த வியாழன் அன்று லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 452 ரூபாவினால் குறைத்ததுடன், அதன்படி தற்போது 3,186 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 05 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவினால் குறைந்துள்ளது. தற்போது 1,281 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையும் 83 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.