உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்காக அடுத்த மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான பிரேரணை இன்று (26) பிற்பகல் இடம்பெறவுள்ள அமைச்சர்கள் சபையில் கலந்துரையாடப்படவுள்ளது.
சபாநாயகர் தலைமையில் கடந்த வியாழக்கிழமை கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் வார இறுதியில் இரண்டு நாட்களுக்கு விசேட நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் உயர்தர வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு நாடாளுமன்றம் கூடினால் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இன்று (26) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அங்கு கருத்துத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இது குறித்து விவாதிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கான திட்டம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று (26) கூடவுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், கடனை அறவிடுவதற்கு தமக்கு உடன்பாடில்லை என தெரிவித்தார்.