எதிர்வரும் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை என அரசாங்கம் அறிவித்துள்ளமையினால், அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (25) செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நந்தலால், அரசாங்கம் மற்றும் நிதியமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, ஜூன் 29 முதல் ஜூலை 3 வரையிலான நீண்ட வங்கி விடுமுறைக்காக ஜூன் 30 சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுப்பதற்கும், ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும், இணையம் மூலம் செய்யப்படும் வங்கிச் செயல்பாடுகளுக்கும் எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.