follow the truth

follow the truth

January, 23, 2025
HomeTOP1மருந்துகளின் விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு 

மருந்துகளின் விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு 

Published on

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 60 வகையான மருந்துகளின் விலைகள் இன்று (26) முதல் 16% குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 16% விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 500 மில்லிகிராம் எடையுள்ள பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 சதமாக கணக்கிடப்பட்டுள்ள அதேவேளை, இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2,270 ரூபா 2 சதமாகும்.

375 மில்லி கிராம் அமோக்ஸிசிலின் கிளாவுலானிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.70.32 ஆகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆறாம் தரத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல்

நாட்டின் பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று (22)...

  50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் சவுதி நன்கொடை

எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு  சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது. பேரீச்சம்பழங்கள்...

கண்டி – மஹியங்கனை வீதிக்கு மீண்டும் பூட்டு

நிலவும் மோசமான காலநிலை காரணமாக கண்டி - மஹியங்கனை வீதி தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று(22) மாலை 06...