மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் கூற்றுப்படி, இலங்கையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தேவையான நேரத்தைப் பெறுவதற்காக எதிர்வரும் ஜூன் 30ம் திகதி உட்பட ஜூன் 29 முதல் ஜூலை 3 வரை நீண்ட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இன்று (25) பிற்பகல் விசேட அறிக்கையொன்றை விடுத்து மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கும் செயல்பாட்டில் நாட்டிலுள்ள எந்தவொரு வங்கியிலும் வைப்புத்தொகை பாதிக்கப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.