follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1கொழும்பிலிருந்து வெளியேற வேண்டாம் - அமைச்சர்களுக்கு அரசு அறிவிப்பு

கொழும்பிலிருந்து வெளியேற வேண்டாம் – அமைச்சர்களுக்கு அரசு அறிவிப்பு

Published on

அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களையும் நாளை (26) முதல் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் வாட்ஸ்அப் செய்தி மூலம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

ஆனால், அதற்கான காரணம் குறித்து அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.

கடன் மறுசீரமைப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில், அரசாங்க அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் கொழும்பில் தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இந்த பிரேரணையை அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டியுள்ளதாக கருதி, எதிர்வரும் சனிக்கிழமை (01) பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஆளும் கட்சியின் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் இவ்வாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இலண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை நாடு திரும்பியதையடுத்து, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...

பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள்...