follow the truth

follow the truth

September, 22, 2024
HomeTOP2மூன்று நிருவனங்களை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்

மூன்று நிருவனங்களை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்

Published on

பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பங்கேற்புடன் நடைபெற்றது.

கொழும்பில் துரித கதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ‘போர்ட்சிட்டி’ க்கு நீர்வழங்கலின் போது முழுமையாக டிஜிட்டல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

“நீர்வழங்கல் அதிகாரசபை கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், அதனை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதே எனது இலக்கு. அதற்கேற்ற வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, துறைமுக அபிவிருத்தி நகருக்கு நீர் வழங்களின்போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்காக திட்டம் வகுக்கப்படுகின்றது.” என இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இதனையடுத்து நீர்வழங்கல் அமைச்சும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சும் இணைந்து ஒரு குழுவை நியமிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...