ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வழங்கிய கருத்துக்காக அவரை கைது செய்யப்போவதில்லை என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை கோரி தாக்கல் செய்த மனுவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.