தற்போது அமைச்சுகள், மாகாண சபைகள், ஆணைக்குழுக்கள் மற்றும் மாவட்டச் செயலக அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் புதுப்பித்த தகவல்களை வழங்குமாறு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
பொது நிர்வாக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (பொது நிர்வாகம்) பி.டபிள்யூ. ராஜபக்ஷ இது குறித்து அமைச்சுச் செயலாளர்கள், அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், அனைத்து ஆணைக்குழு செயலாளர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகத்தர்களின் பணி நியமனம், இடமாற்றம் மற்றும் ஆட்சேர்ப்பு ஆகிய செயற்பாடுகளை மிகவும் உகந்த முறையில் மேற்கொள்ள இந்தத் தகவல்கள் அவசியமானது என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூலை 30ஆம் திகதிக்கு முன்னர், அரச தழுவிய சேவைப் பதவிகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் தகவல்களை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சின் எல்லைக்குட்பட்ட திணைக்களங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் தகவல்கள் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.