இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து அமுல்படுத்துமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். எவ்வாறாயினும் மேல் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.