டெங்கு காய்ச்சலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மேல்மாகாண பாடசாலை மாணவர்களின் பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக உடலுக்கு பொருந்தக்கூடிய வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் போக்கு அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
“மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சீருடைக்கு மேலதிகமாக உடலை மறைக்கும் வெளிர் நிற ஆடைகளை அணிந்து வருமாறும் வெப்பநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணிந்து வருமாறும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு ஆலோசனைகளை அனுப்பியுள்ளோம்.
அதற்கு ஆளுநரின் ஒப்புதலும், தலைமைச் செயலாளரின் ஒப்புதலும், கல்வித்துறை செயலாளரின் ஒப்புதலும் உள்ளதாகத் தெரிய வந்தது. நாங்கள் அதை ஒரு நல்ல வேலையாக பார்க்கிறோம். ஆபத்து நீங்கும் வரை இதனை செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்..”