follow the truth

follow the truth

January, 21, 2025
HomeTOP1சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - பொலிஸ் நிலையத்தில் விஷம் அருந்திய தாயும் தந்தையும்

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸ் நிலையத்தில் விஷம் அருந்திய தாயும் தந்தையும்

Published on

பதிமூன்று வயது மகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்து கடும் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்த பெற்றோர்கள் இருவரும் நேற்று (18) மாலை வெலிமடை பொலிஸ் நிலையத்தில் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிமடையைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் சரோஜா என்ற தம்பதியினரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏலவே குறித்த சிறுமி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டதாகவும் பின்னர் தந்தையினால் குறித்த சிறுமி வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். எனினும் குறித்த சிறுமி மீண்டும் வீட்டிலிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதிமூன்று வயது மகளின் மோசமான நடத்தையால், இந்த தம்பதியினர் சில காலமாக கடும் விரக்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சிறுமி 28 வயதுடைய இளைஞனுடன் காதல் உறவு கொண்டிருந்ததாகவும், ஆறு நாட்களுக்கு முன்னர் அந்த இளைஞனுடன் வாழ்ந்து வந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர், வெலிமடை நகரில் சுற்றித் திரிந்த சிறுமியை, நகர மக்கள் அளித்த தகவலின்படி பொலிசார் கைது செய்தனர்.

மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு ஆஜர்படுத்த பொலிசார் ஏற்பாடு செய்துள்ளனர், அங்கு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர் சிறுமியின் பெற்றோரை வரவழைத்த பொலிசார் சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்குள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பின்னர், தம்பதியை வெலிமடை மருத்துவமனையில் அனுமதிக்க பொலிசார் ஏற்பாடு செய்துள்ளனர். எனினும் பதுளை வைத்தியசாலையில் இருந்து தந்தை தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதிமூன்று வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 28 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்த நிலையில் எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது சிறுமி சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

வெலிமடை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சம்பத் அபேவிக்ரம தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர்களுக்கு இலவச பாதணிகளுக்கான 3,000 ரூபா வவுச்சர்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும்...

அனைத்துப் பிரிவினரின் பங்களிப்பையும் பெற்று இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்

நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

நேற்று (20) இரவு  அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் வைத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண...