முட்டை உற்பத்தியை நீடித்து நிலையாக அதிகரிக்க நீண்ட கால வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் பலன்கள் அடுத்த 4 மாதங்களில் அனைத்து நுகர்வோருக்கும் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் குஞ்சு விநியோகத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்களுக்கு 2,300 கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் இத்திட்டத்தின் கீழ் சுமார் 100,000 கோழிக் குஞ்சுகள் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.